Tuesday, October 31, 2017

Til Raitha

எள்ளுப்பச்சடி.
தேவை:--தேங்காய்:---1/2கப்,   மிளகு:--1/4கப்,   கறிவேப்பிலை,
கொத்தமல்லி   சிறிதளவு ,எள்ளு:---1/2கப்,    உப்பு:---தேவையான
அளவு,  கெட்
டித்தயிர்:---2கப்.தாளிக்க:--கண்டிப்பாக,நல்லெண்ணெய்
:---3டீஸ்பூன்,   கடுகு,   உளுத்தம்பருப்பு:--தலா1டீஸ்பூன்,சிறிது
கறிவேப்பிலை.

செய்முறை:----தயிரைத்தவிர,    மற்ற   எல்லாப்பொருட்களையும்,
மிக்ஸியில்,   நன்கு   அரைத்துக்கொள்ளவும்.தயிரில்,அரைத்தவிழுதையும்
கலந்துமேலே  தாளிக்கவும் .இந்தப்பச்சடீ,இட்லி
தோசை,  சாதம்  இவற்றுடன்கலந்து ,   உண்ணலாம்
மிகவும்,ருசியானது.கால்சியம்  நிறைந்த,இப் பச்சடி
உடலுக்கு,நல்ல,   வலுவைத்தரும்
கருத்துக்களை மின். அஞ்சல்   முகவரிக்கு.  அனுப்பவும்
.       girija46@icloud.com

Monday, October 30, 2017

Appala Samosa

அப்பள   சமோசா
தேவை:--முழு   அப்பளமா:---6,    பீன்ஸ்,காரட், கோஸ், வேகவைத்தது:------தலா1/2கப்   வீதம்  :---11/2கப் ,  வேகவைத்து தோல். உரித்த    உருளைக்கிழங்கு:---3,  காரப்பொடீ:---1டீஸ்பூன்,   உப்பு:--தேவையான  அளவு,     மசாலாப்பொடி.   :---தேவை   என்றால்  சேர்க்கலாம்.பொடியாக,   நறுக்கிய
கொத்தமல்லி   தழை.
செய்முறை:---அப்பளத்தை     இரு    பக்கமும்,    எண்ணெய்    தடவி   வைத்துக்கொள்ளவும்.
வேகவைத்த    காய்களையும்,   உருளைக்கிழங்கு,    காப்பொடீ,   உப்பு,   எல்லாவற்றையும்,
சேர்த்து, வதக்கிய ,   பின், கொத்தமல்லி.தழையை,    சேர்த்து,   நன்கு    கலக்கவும்.
எண்ணெய்     தடவிய    அப்பளத்தின் நடுவில்     இந்தப்    பூரணத்தை      வைத்து,    அப்பளத்தை
மூடி,(தண்ணியை ,   தொட்டு)சமோசா,     மாதிரி     மூடவும்.     பின்.பு,    அந்த  சமோசாவை,
மைக்ரோவேவ்,  அவனில்,  ஒருபக்கம் 2நிமிடம் ,     வீதம்    2பக்கமும்,    கருகாமல்,   நன்கு வேகவைத்து     எடுக்கவும்.  விட்டமின்,    புரோட்டீன்,    ரிச்,    எண்ணெய்    இல்லாத,    சமோசா
உண்பதற்கு   மிகவும்,      சுவையாக    இருக்கும்.    மாலை    நேர  டீபனுக்கு,    உகந்தது.
  சிறியோர்   முதல்,     பெரியோர்கள்,     வரை    எல்லோரும்,   விரும்பி   உண்பர்.
    கருத்துக்களை ,  மின் அஞ்சல்    முகவரிக்கு,   அனுப்பவும்.
                      girija46@@icloud.com.

  
,

Plantain flower chatney.

 வாழைப்பூ   சட்னி.
தேவை:---கடுகு:---1டூஸ்பூன்,உளுத்தம்பருப்பு:---5டீஸ்பூன்,   தேங்காய்துருவியது:----1/2கப்
நறுக்கிய தக்காளி:--2,    கறிவேப்பிலை,  கொத்தமல்லி:----சிறிதளவு,
மிளகாய்வத்தல்:------2,கள்ளன்   எடுத்த,   வாழைப்பூ:-3கைப்பிடி   அளவு.
பெருங்காயம்:---சிறிதளவு.உப்பு:-தேவையான அளவு. சர்க்கரை1/2 டீஸ்பூன்.
செய்முறை:---மேற்கூறிய,     எல்லா பொருட்களையும்,  எண்ணெய் விட்டு,வதக்கிய, பின்பு,
மிக்ஸியில்,நன்கு    மசிய. அரைக்கவும்..  மிகவும்    ருசியான    இந்த     துவையல்,ஜீரணத்திற்கு
உகந்தது.  சாதம்     இட்லி,     தோசை,     சப்பாத்தி,   பூரி    எல்லாவற்றிற்கும்,      ஏற்ற. சைட்   டிஷ்ஷாகவும்      இருக்கும்     என்பதில்,      சந்தேகமே. இல்லை.
                   கருத்துக்களை    மின்   அஞ்சல் முகவரிக்கு   அனுப்பவும்
                      girija46@icloud.com
   

Thursday, October 26, 2017

Bitter Gourd and Manathakkali Vaththal powder

பாகற்காய்வத்தல்,மணத்தக்காளிவத்தல்   பொடி.
தேவை:-கடுகு:---1டீஸ்பூன்,   உளுத்தம்பருப்பு,    கடலைப்பருப்பு     தலா:--5டீஸ்பூன்
மிளகு,சீரகம்   தலா:---1டீஸ்பூன்,    மிளகாய்  வத்தல்:---2,கறிவேப்பிலை :---1/2கப்,
உப்பு  :--தேவையான  அளவு,   பாகற்காய்  வத்தல்,   மணத்தக்காளிவத்தல்   தலா:---1கப்
பெருங்காயப்பொடி:---11/2 டீஸ்பூன்.சுக்குப்பொடி:---1டீஸ்பூன்
செய்முறை:---மேற்கூறிய,பொருட்களை,     எல்லாம்   வறுத்து,இறுதியில்,   வத்தல்களையும்,
பெருங்காயப்பொடி,   சுக்குப்பொடி   இவைகளையும்,சேர்த்து,    வறுத்து,   அவைகளை,
மிக்ஸியில் நன்கு  பொடி   செய்யவும்.   இந்தப்   பொடி    கசப்பு     இல்லாமல்,  நல்ல
ருசியுடன்,    இருக்கும்.   நீரிழிவு    நோய்   உள்ளவர்களுக்கு,   இந்தப்பொடி,    மிகவும்,   நல்லது.
சாதமுடன்கலந்து,    உண்ணலாம்.    மோர்    சாப்பாட்டுடன்,   கலந்து   உண்ணலாம்.
மிகவும்     ருசியாக    இருக்கும்.
கருத்துக்களை      மின்அஞ்சல்   முகவரிக்கு   அனுப்பவும்.
                                  girija46@icloud.com

Wednesday, October 25, 2017

Thuvaran chatney

Thuvaran   Chatney(துவரன்சட்னி)
தேவை:--கடுகு:--1டீஸ்பூன்,   உளுத்தம்பருப்பு:--6டீஸ்பூன்,  மிளகு:-1/2டீஸ்பூன்,
சீரகம்:---1டீஸ்பூன் ,தக்காளி:---2நறுக்கியது,கறிவேப்பிலை,   கொத்தமல்லி:---
சிறிதளவு,    மிளகாய்வத்தல்,    உப்பு:---தேவைக்கேற்றபடி,   பெருங்காயப்பொடி
 :---1டீஸ்பூன்.    வாழைக்காய்    வேக வைத்து     உரித்த   தோல்::-----2கப்.
செய்முறை:---மேற்கூறிய   எல்லா    பொருட்களையும்,    எண்ணெய்   ஊற்றி
வறுத்து,மிக்ஸியில்   நன்கு   அரைக்கவும்.  சக்தி,   நிறைந்த,    மிகவும்,
ருசியான   இந்த   சட்னி,   சாதம்,    இட்லி,தோசை,    சப்பாத்தி,    பொங்கல்
எல்லாவற்றிற்கும்,    உகந்த    சைட்   டிஷ்.
கருத்துக்களை ,      மின்   அஞ்சல்,முகவரிக்கு    அனுப்பவும்
                    girija46@icloud.com

Tuesday, October 24, 2017

Okra Porial

Okra Porial (வெண்டைக்காய்   பொரியல்)
தேவை:-வெண்டைக்காய்:---1/2 கிலோ,(க்ராஸ். ஆக  வெட்டவும்)பொடிப்  பொடி
யாக    நறுக்கிய   தக்காளி:---3,   பெரிய   வெங்காயம்:--நறுக்கியது:--1உப்பு,
காரப்பொடி:---தேவையானஅளவு,   சீரகப் பொடி,கொத்தமல்லிவிதைப்பொடி
தலா:---1டீஸ்பூன்,    எண்ணெய்:---4டீஸ்பூன் ,  தாளிக்க:---கடுகு1டீஸ்பூன்.
செய்முறை:---அடுப்பில்,   வாணலியை   ஏற்றி ,   கடுகு  தாளித்து,  வெங்காயம்
தக்காளியை,    நன்குவதக்கி,   உப்பு   காரப்பொடி   சேர்த்து,  பின்பு,
வெண்டைக்காயையும்    சேர்த்து நன்கு   வதக்கவும்.  இறக்கும்   பொழுது

சீரகப்பொடி,    கொத்தமல்லிப் பொடியைச்   சேர்த்து  நன்கு   வதக்கிய,   பின்
கறிவேப்பிலை    சேர்த்து   விடவும்.     ரொம்ப. ருசியான   பொரியல்,புதுமை
யானதும்  ஆகும்.  
கருத்துக்களை,       மின்அஞ்சல்    முகவரிக்கு   அனுப்பவும்.     girija46@icloud.com

Monday, October 23, 2017

Ghee Appam.

Ghee   Appam:--
நெய்  அப்பம்:--
தேவை:--ஊறவைக்க   பச்சரிசி:---2கப்,வெல்லம்   :--11/2கப்,   தேங்காய்3/4கப் ஏலப்பொடி:--1டீஸ்பூன், குழி ஆப்பம்   சுடும்   சட்டி,  நெய்யும்,   கொஞ்சம்,
எண்ணெயும்  , கலந்து,  வைத்துக்கொள்ளவும்.    ஊறவைத்த   அரிசி,தேங்காய்,
வெல்லம்,ஏலப்பொடி,    எல்லாவற்றையும்   சேர்த்து,அதனுடன்,  ஒரு ,பூவன்
பழமும்   சேர்த்து,    நன்கு   மை போல்   தோசை   மாவு    பதம்     வரும் வரை
அரைக்கவும்.
செய்முறை:---குழி   ஆப்பம் செய்யும் , சட்டியை,அடுப்பில்.   ஏற்றி    ஒவ்வொரு
குழியிலும், நெய்யும்,   எண்ணெயும்,      கலந்தவற்றை1 டீஸ்பூன்    ஊற்றி
அது    காய்ந்தவுடன்,    மாவை,   ஒவ்வொரு    குழியிலும்,   ஊற்றவும்.அடுப்பை
மிதமாக,   எரிய  விடவும்.   அப்பம்   பொன்   நிறமாக,   வந்தவுடன்
எடுத்து  விடவும்.  இது   ரொம்ப  ருசியாகவும்,  சாப்ட்,    ஆகவும்,   இருக்கும்
   கார்த்திகை,      பண்டிகையில்  பொரியும் ,அப்பமும்,   தான்     முக்கிய,
இடத்தை பெற்றுள்ளன.
கருத்துக்களை    மின்   அஞ்சல்   முகவரிக்கு    அனுப்பவும்
                   girija46@icloud.com

KARTHIKAI pori

KARTHIKAI   Pori(கார்த்திகைப்  பொரி)
தேவை:- ---சுத்தம்   செய்யப்பட்ட அவல். பொரி:---4கப்,பல்லு  பல்லாக கீறிய   தேங்காய்:---2கப்
சுக்குப்பொடி:---1டீஸ்பூன், ஏலக்காய்   பொடி:---1டீஸ்பூன்,  வெல்லம்:---3கப்.
செய்முறை:---வெல்லத்தை  சிறிது  நீர்  ஊற்றி  பழப்பாகு  காய்ச்சவும்.(கெட்டிப்பாகு  ஆகாமல் சிறிது   முன்னால்  வருவது) அதில், பொரி,  தேங்காய்,  சுக்குப்பொடி,ஏலப்பொடி,   எல்லாவற்றையும்   ஒன்றாக   கலந்து, அரிசி  மாவைத்    தொட்டு   உருண்டையாகப்
பிடிக்கலாம்.   அல்லது   உதிரி  யாகவும்  வைத்துக்   கொள்ளலாம்.
கருத்துக்களை,மின்அஞ்சல்    முகவரிக்கு  எழுதவும்
                    girija46@icloud.com
 

Friday, October 20, 2017

Masala Peanut

மசாலா   நிலக்கடலை.
தேவை:--சுத்தம்   செய்த   நிலக்கடலை:--2கப்,   அரிசி. மாவு:--1/2கப்,   கடலைமாவு:--1/2கப்,கரம்
மசாலாப்பொடி:---1டீஸ்பூன், இஞ்சி  ,பூண்டு விழுது:--1/2டீஸ்பூன்,   உப்பு,காரப்பொடி:---தேவைக்
கேற்றவாறு,  காய்ந்த   எண்ணெய்:--2டீஸ்பூன்.
செய்முறை:---நிலக்கடலையைத். தவிர, மற்றவற்றை,    எல்லாம்   கலந்து,   சேர்த்து,   நிலக்கடலையையும்,   சேர்த்து,   உதிரி,உதிரி  யாகபிசையவும்.   பின்பு     வாணலியை,    அடுப்பில்
ஏற்றி,  எண்ணெயை,    காயவைக்கவும்.   எண்ணெய்     காய்ந்த  பிறகு,  அதில்,    நிலக்கடலை
மாவை   உதிர்த்த   மாதிரி    போடவும்.    நன்கு    வெந்து,பொன்   நிறமாக,வந்தவுடன,    எடுத்து
விடவும்.    தின்பதற்கு,    நல்ல   சுவையான,     மசாலா    நிலக்கடலை     ரெடி.
      கருத்துகளை ,    மின்   அஞ்சல்     முகவரிக்கு,      அனுப்பவும்.
                 girija46@icloud.com

Friday, October 13, 2017

Basinladu

பேசின்   லாடு.
தேவை:-கடலைமாவு:-1கப்,    வெள்ளைரவை:-1கப்,   சர்க்கரை:-4கப்,
நெய்:-2கப்,  ஏலக்காய் பொடி:-1டீஸ்பூன் ,    ஜாதிக்காய்ப்பொடி:-சிறிதளவு
குங்கும்ப்பூ    இருந்தால்   கொஞ்சம்.
செய்முறை:-   கடலை மாவையையும்,  வெள்ளை. ரவையையும்.  பொன்
நிறத்தில்,வறுத்துக்   கொள்ளவும்.வாணலியை,அடுப்பில்  ஏற்றி,சர்க்கரையை,
சிறிது  நீர்   ஊற்றி   கம்பி   பதம்   பாகு. வைத்துக்  கொள்ளவும். பின்பு ,
அதில்,   வறுத்த   கடலைமாவையும்,    வறுத்த    ரவையையும்,    கொட்டி,
கிளறவும்.நெய்யை,    சிறிது  சிறிதாக.  ஊற்றி  ,   மைசூர் பாகு,   போல்
பொங்கிவரும்.  பொழுது,நெய்     தடவிய   தட்டில்   கொட்டி,5   நிமிடம்
கழித்து   கேக் போடவும்.        இறக்குவதற்கு  முன்    ஏலக்காய்,   ஜாதிக்காய்
பொடியைச்    சேர்க்கவும்.   மிகவும்   எளிதாகச்    செய்யும்    இந்த  கேக்
தின்பதற்கு,    மைசூர்பாகைப்    போல்,  ரொம்ப   ருசியானதும்கூட.
           கருத்துக்களை    மின் அஞ்சல்    முகவரிக்கு ,    அனுப்பவும்
                          girija46@icloud.com

Avil (poka)mixture

அவல் மிக்சர்.
 தேவை:-கல்,மண்,இல்லாமல்   சுத்தம்   செய்த   அவல்:-4கப்,    தோல்உரித்த,    வெள்ளை
நிலக்கடலை:-2கப்,   பொட்டுக்கடலை:-1கப்,   முந்திரி:-1கப்,   உப்பு:-தேவையான   அளவு,
காரப்பொடி:-1டீஸ்பூன்,    கறிவேப்பிலை:-சிறிதளவு.   தேங்காய். எண்ணெய்:-1/2லிட்டர்.
செய்முறை:-.தேங்காய்  எண்ணெயில்   செய்தால்   நல்ல  மணமுடன்,    கொஞ்சநாள்
தாங்கும்.  சுத்தம்   செய்த,  அ வலை,    எண்ணெயில்,   பொரித்து,வைத்துக்   கொள்ளவும்.
நிலக்கடலையையும்,  பொரித்து வைத்துக்  கொள்ளவும்.    பொட்டுக்கடலையையும்,
முந்திரியையும், கறிவேப்பிலையையும்,      பொரித்து,   உப்பு ,காரம்,சேர்த்து, பெருங்காயப்பொடி
யையும்,   சேர்த்துக்,    கலக்கவும்.புரதச்சத்து,    நிறைந்துள்ள   இந்த    மிக்ஸர்,  தின்பதற்கு
மிகவும் ,    சுவையானது.   சிறியோர்   முதல், பெரியோர்கள்    வரை,விரும்பி,    உண்பர்.
           கருத்துக்களை , மின் அஞ்சல் ,முகவரிக்கு,   அனுப்பவும்.
                girija46@icloud.com

Wednesday, October 11, 2017

Milkcake

Milkcake - பால்கேக்

தேவை:-பால்:-    2கப்,   சர்க்கரை:-4கப்,   வெள்ளைரவை:-1/2கப்,     நெய்:-1/2கப்.   முந்திரி,  பாதாம்பருப்பு   பொடிசெய்தது3/4கப்.   குங்கும்ப்பூ  இருந்தால்,சிறிதளவு
செய்முறை:-இவை   எல்லாவற்றையும் ,    வாணலியில்   ஊற்றி,   அடுப்பில்   வைத்து கிளறிக்கொண்டே   இருக்கவும்.    அதற்குள்   ஒரு    தட்டில்   நெய்   துடைத்து ,  வைத்துக்  கொள்ளவும் .   மைசூர் பாகு   பதம்   வந்தவுடன்    நெய்  தடவிய    தட்டில்    கொட்டி,   5நிமிடம்   கழித்து   வில்லைகள்,   போடவும்.   காரமல்   வாசனையுடன்,    வாயில்    கரையும்   பத த்துடன
மிகவும்,   நன்றாக   இருக்கும்.   செய்வதும்   எளிது.   சீக்கிரமாக,செய்து  விடலாம்.

     கருத்துக்களை ,    மின். அஞ்சல்   முகவரிக்கு. அனுப்பவும்

Ribbon. Pakoda

ரிப்பன்    பக்கோடா.
தேவை:-கடலைமாவு:-1கப்,     அரிசிமாவு:-:-1கப்,,    பொட்டுக்கடலை மாவு:-3/4கப்,
எள்ளு1டீஸ்பூன்,     காரப்பொடி,    உப்பு,:-தேவையான அளவு ,    வெண்ணெய்1/2கப்,   காய்ச்சின
எண்ணெய்:-3டீஸ்பூன்,ஊற்றி    மாவை   கட்டி,இல்லாமல்,   நன்கு   பிசையவும்     எண்ணெய்:-1/2
லிட்டர்.    முறுக்கு   பிழியும்.   சொப்பு.
செய்முறை:-வாணலியில்,    எண்ணெயை,   ஊற்றி,அடுப்பில்,வைக்கவும்.எண்ணெய்காயந்ததும்
முறுக்கு,    பிழியும்,அச்சில்,      மாவை. போட்டு,    எண்ணெயில்,     பிழியவும்.பொன்
நிறமாக வும்,       சலசல    என்று சத்தம் வந்தவுடன். ,   எடுத்துவிட்டு ,    மற்றவைகளை
பிழியவும்.
                 கருத்துக்களை   மின்  அஞ்சல்   முகவரிக்கு  அனுப்பவும்
                             girija46@icloud.com

Monday, October 9, 2017

Pineapple Rasam Banaraskheer

பனாரஸ் கீர்

தேவை:-வேகவைத்த,பூசணிக்காய் துண்டுகள்1கப்,சர்க்கரை21/2கப்,
ஏலக்காய்பொடி:-1டீஸ்பூன்,முந்திரி,திராட்சை:-சிறிதளவு,நெய்:-2டீஸ்பூன்
குங்கும்ப்பூ,இருந்தால்  சிறிதளவு.பால்:-21/2கப்
செய்முறை:-வேகவைத்த பூசணிக்காயை நன்கு அரைத்துக்கொள்ளவும்.
அதை அடுப்பில் ஏற்றி,பச்சை வாசனைபோகும் வரை(அதாவது10நிமிடம்)
கொதிக்கவிடவும்.பின்புசர்க்கரையை சேர்க்கவும்.சிறிதுகொதித்தவுடன்
கீழிறக்கி  பாலைசேர்க்கவும்பின்புநெய்யில்முந்திரி,திராட்சை,வறுத்து
பாயாசத்துடன்,சேர்க்கவும்குங்கும்ப்பூவையும்,கலந்துநன்கு,கிளறவும்
இது உடலுக்கு,குளிர்ச்சியைதருவதுடன்,நன்கு,சிறுநீர் பிரியவும்உதவும்
மிகவும்ருசியானதும்ஆகும்
கருத்துக்கள்வரவேற்கப்படும்.மின்அஞ்சல்முகவரிக்கு  அனுப்பவும்
                   girija46@icloud.com


Pineapple rasam(பைன்ஆப்பிள்ரசம்)
தேவை:-பைன்ஆப்பிள்துண்டுகள்:-1கப்,   வேகவைத்த   துவரம்பருப்பு:-2கப்,   பச்சைமிளகாய்
நறுக்கியது:-2,  இஞ்சி:- சிறிதளவு,   மிளகு,சீரகப்பொடி:-2டீஸ்பூன்,   தாளிக்க:-நெய்:-1டீஸ்பூன்,
மிளகு,சீரகத்தூள:-1டீஸ்பூன்,   கறிவேப்பிலை,   கொத்த மல்லிதழை:-சிறிதளவு,    பெருங்காயப்பொடி:-1டீஸ்பூன்,    சர்க்கரை:-1டஸ்பூன்,  நறுக்கிய. தக்காளி:-2. உப்பு
.தேவையான  அளவு
செய்முறை:- பைன்ஆப்பிள்துண்டுகளை,வேகவைத்து ,  அதன் சாறை  எடுத்துக் கொள்ளவும்
அடுப்பில்,  வாணலியை.  ஏற்றி,    நெய்யில். கடுகு,சீரகம்தாளித்து.  பச்சைமிளகாய்,  இஞ்சி.
தக்காளி   எல்லாவற்றையும்,   நன்குவதக்கவும்   பின்புபைன்ஆப்பிள். சாறை, ஊற்றி.  10நிமிடம்
கொதிக்கவிடவும் .  பின்பு,துவரம் பருப்பை,கரைத்து,   ஊற்றவும்.பின்பு.   ரசத்தில்.  கறிவேப்பிலை,
கொத்தமல்லிதழை,     பெருங்காயப்பொடிசேரக்கவும்.சர்க்கரையும்,   சேர்த்து,   நுரை   வந்தவுடன்
மிளகுசீரகப்பொடியைச்   சேர்த்து  கலக்கி   கீழே  இறக்கிவிடவும்உப்பும்,   சேர்க்கவும்.
ரொம்ப,    டேஸ்டியான   இந்த ரசம் , உடலுக்கு   நல்லது.   ஜீரணத்திற்கு. உகந்தது.   மலசிக்கல்
வராமல்   காப்பாற்றும்
    கருத்துக்கள்,   வரவேற்கப்படும்.   மின்அஞ்சல்   முகவரிக்கு   அனுப்பவும்
                           girija46@icloud.com




Lemon rasam

எலுமிச்சம்பழரசம்
தேவை:-வேகவைத்த பருப்பு,நறுக்கிய பச்சைமிளகாய்:-2,நறுக்கிய இஞ்சி:-சிறிதளவு,தாளிக்க:-
கடுகு,சீரகம்,தலா1டீஸ்பூன்,பொடியாக,நறுக்கிய  தக்காளி:-2,உப்பு:-தேவையான  அளவு,
எலுமிச்சம்பழசாறு:-2பழம்.தாளிக்க:-நெய்.பெருங்காயப்பொடி.கறிவேப்பிலை
கொத்தமல்லிதழை:-சிறிதளவு,மிளகு,சீரகப்பொடி2டீஸ்பூன்
செய்முறை:-வாணலியில் நெய் ஊற்றி கடுகு ,சீரகம் தாளித்தபின்,இஞ்சி,ப.ச்சை
மிளகாய்,தக்காளிப்போட்டு,நன்கு வதக்கிய பின்வேகவைத்ததுவரம் பருப்பை
கரைத்துஊற்றவும்.உப்பு சேர்க்கவும்.10 நிமிடம் கொதித்த பின்,நீரில்கறிவேப்பிலை, கொத்தமல்லிதழை,பெருங்காயப்பொடி,மிளகு,சீரகப்பொடி,எலுமிச்சம்பழச்சாறு,எல்லாவற்றையும்
கரைத்து,ரசத்துடன்,சேர்க்கவும்.ஜீரணத்திற்கு நல்லது.நன்கு பசிஎடுக்கும்.வைட்டமின்சி,நிறைந்தது.
                   கருத்துக்கள்,வரவேற்கப்படும்.மின்அஞ்சல் முகவரிக்கு  அனுப்பவும்
                              girija46@icloud.com

அவல் பாயசம்


அவல் பாயசம்

தேவையானவை:-
நெய்யில்வறுத்தவல்----2கப்,சர்க்கரை--4கப்,பால்----3கப்,ஏலப்பொடி---1கப்,முந்திரிபருப்பு1/4கப்,

செய்முறை:-
வறுத்த அவலை  வேகவைக்கவும்.பின்புசர்க்கரையைச்  சேர்க்கவும். நன்கு
கொதித்த ப்பிறகு,ஏலப்பொடி,குங்கும்ப்பூசேர்க்கவும்,  நெய்யில் வறுத்த  முந்திரியை, கலந்து,பாயசத்தை இறக்கி விடவும்
                          கருத்துக்கள் வரவேற்கப்படும்.மின்அஞ்சல்முகவரிக்கு  அனுப்பவும்.
                                girija46@icloud.com
                           
   



Friday, October 6, 2017

Mint Rasam

Mint Rasam

பொதினாரசம்

தேவை:-புளி--சிறிதளவு,நறுக்கிய தக்காளி--2,ரசப்பொடி----11/2டீஸ்பூன்,பூண்டு--2பல்
மஞ்சள்பொடி--1டீஸ்பூன்,உப்பு--தேவையானஅளவு,கறிவேப்பிலை,கொத்தமல்லி,
சிறிதளவு,பொதினா---   நறுக்கியது1கைப்பிடி அளவு,வேகவைத்ததுவரம்பருப்பு,
பெருங்காயப்பொடி---1டீஸ்பூன்,தாளிக்க---நெய்,கடுகு,சீரகம் தலா1டீஸ்பூன்
செய்முறை:-வாணலியில்கரைத்த புளியை,ஊற்றி ,அதில்தக்காளிரசப்பொடி
மஞ்சள்பொடி,உப்புபோட்டு,பூண்டு,சிறிது  கறிவேப்பிலைப்போட்டு10நிமிடம்
கொதிக்கவிடவும்.பின்பு,பருப்பை  கரைத்துஅதில்  கறிவேப்பிலைகொத்மல்லி
தழை,பொதினா,பெருங்காயப்பொடிசேர்த்து,ரசத்துடன்,சேர்க்கவும்.பின்பு
நெய்யில் கடுகு,சீரகம் தாளிக்கவும்.
                                           
எல்லோருடைய கருத்தும்,வரவேற்கப்படும்.  கீழே உள்ள மின்அஞ்சல்,
முகவரிக்கு,அனுப்பவும்.
                           
  girija46@icloud.com

Thursday, October 5, 2017

ரசம்,கறிவ

சித்தரத்தை,அதிமதுரம்,ரசம்
தேவை:-நெல்லிக்காய்அளவுபுளி,ரசப்பொடி--11/2டீஸ்பூன்,மஞ்சள்பொடி-1டீஸ்பூன்,உப்பு-தேவையானஅளவு,சித்தரத்தைப்பொடி-1டீஸ்பூன்,அதிமதுரப்பொடி-1டீஸ்பூன்,கறிவேப்பிலை,
கொத்தமல்லிதழை,சிறிதளவு,பெருங்காயப்பொடி.தக்காளி-நறுக்கியது--2'பூண்டு--2பல்
செய்முறை:-புளியை. கரைத்துப்பிரித்தலில்,அதில்உப்பு,மஞ்சள்பொடி,ரசப்பொடி,பூண்டு,தக்காளி
பூண்டு,கறிவேப்பிலை,சேர்த்து,கொதிக்கவிடவும்பின்பு  வேகவைத்த துவரம்பருப்பை ,கரைத்து
அதில்கறிவேப்பிலை,கொத்தமல்லி,சித்தரத்தை,அதிமதுரம்பொடி ,  பெருங்காயப்பொடி,சேர்த்து
கலந்து,ரசத்துடன்சேர்க்கவும்.புன்புநெய்யில்,கடுகு,சீரகம்,தாளித்துரசத்தில்,சேர்க்கவும்.
                           இந்த,ரசம்,உடலுக்குமிகவும்,நல்லது.தொண்டைகரகரப்புக்கும்,ஜலதோஷத்திற்கும்மிகவும்
உகந்தது.
                       உங்கள் கருத்துக்கள்,வரவேற்கப்படும்அதைகீழேஉள்ள,மின்அஞ்சல்முகவரிக்கு
அனுப்பவும்
                          girija46@icloud.com