Wednesday, December 20, 2017

Dhal Usili

 Dhal  usili( பருப்பு  உசிலி)
தேவை:---துவரம்  பருப்பு:-----1கப்,     கடலை   பருப்பு:----1கப்,தேங்காய்:----1/4
கப்,   பச்சை    மிளகாய்:---2,     இஞ்சி:----சிறிதளவ,     உப்பு:---தேவையானஅளவு
கறிவேப்பிலை,    கொத்தமல்லி  தழை:----சிறிதளவு.
செய்முறை:----துவரம் பருப்பு,   கடலை  பருப்பையும், தனித்  தனியாக   ஒரு
மணி   நேரம் , ஊறவைத்து   நீர்   இல்லாமல்   வடித்து    வைத்துக்    கொள்ளவும்.
பின்   மிக்ஸியில்    துவரம்பருப்பு    பச்சை மிளகாய்,   இஞ்சியுடன் சேர்த்து,ஒன்றும்
இரண்டுமாக,   அரைத்துக்   கொள்ளவும். அதைப்போன்று,     கடலை   பருப்பு,
கறிவேப்பிலை,   கொத்தமல்லியுடன்,அரைத்துக்கொள்ளவும்.  இரண்டையும்
 கலந்து,   அவனில்,   ஒருநிமிடம்     வேகவைக்கவும்.   பின்,  அடுப்பில்,  வாணலியை
ஏற்றி  எண்ணெய்   ஊற்றி,     கடுகு  தாளித்து,      வேகவைத்த  பருப்புக்களையும்,
போட்டு,    உதிர்,   உதிராக  வதக்கவும்.    அதனுடன்,   வேகவைத்த    பீன்ஸ்,    அல்லது
கோஸ்,   கொத்தவரங்காய்,    அல்லது   வெந்தயக்கீரை,   முருங்கை. கீரைப்.
போட்டும்,    செய்யலாம் .   இறக்கும்   பொழுது  பெருங்காயப்பொடி    சேர்த்து ,  நன்கு
கிளறி    இறக்கவும்.  
  இதை    சாத்த்துடன்     இணைத்தும்    உண்ணலாம்.    மோர்க்குழம்புக்கு    ஏற்ற,
சைட் டிஷ்.   தோசையுடன்   நடுவில்,     வைத்தும்   உண்ணலாம்.   புரதம்    மிகுந்துள்ள
 உணவு.    பருப்பு    சேர்த்துக்   கொள்ளாதவர்களுக்கு,   இது   ஒரு    மாறுதலாய்     இருக்கும்
நல்ல    சுவை,     மணம்கொண்டது
கருத்துக்களை     மின்   அஞ்சல்    முகவரிக்கு    அனுப்பவும்
girija46@icloud.com













Thursday, December 14, 2017

Vegetable role Dosai

Vegetable   Role dosai(விஜிடபிள்    ரோல்   தோசை.)
தேவை:----4கப்    இட்லி   அரிசி,1கப் :----உளுத்தம்பருப்பு பருப்பு,   2டீஸ்பூன்
 வெந்தயம்,ஊறவைத்து,    அரைத்து,உப்பும். கலந்து    வைத்துக்கொள்ளவும்.
கோஸ்,   காரட்,     பீன்ஸ்,    பட்டாணி,இவற்றை   வேகவைத்து,  வெங்காயத்தை
 வதக்கி,அதனுடன் வேகவைத்த   காய்களையும்,உப்பு,     காரம்சேர்த்து
வைத்துக்கொள்ளவும்.கொத்தமல்லிதழை(நறுக்கியது)     துருவிய    பன்னீர்
அலங்கரிக்க    வைத்துக்கொள்ளவும்.
செய்முறை:---அடுப்பில்    தோசைக்கல்லை   ஏற்றி,    கல்   சூடானதும்,    சிம்மில்
வைத்து,     மெலிதாக    தோசை    வார்க்கவும்.     நன்கு,     வெந்த தும்     திருப்பிக
போட்டு,வெந்தபிறகு,     காய்கறி  கலவையை,   அதன்மீது    வைத்து,     மேலே
பன்னீரும்     தூவி,      கொத்தமல்லியையும்    தூவி   தோசையை     சுருட்டி(ரோல்)
சுடச்சுட   பரிமாறவும்.     குழந்தைகள்,    மிகவும்.  விரும்பி    உண்பர்.      நல்ல
சத்து   மிகுந்துள்ளது .    காய்கறிகள்,      விரும்பாதவர்கள்    கூட  இதை    விரும்பி
உண்பர்.சத்துக்கள்     மிகுந்து     இருப்பதால்,  ஒரு தோசை     தின்றால்   கூட
வயிறு   நிரம்பி   விடும்.
கருத்துக்களை,  மின்    அஞ்சல்    முகவரிக்கு    அனுப்பவும்
        girija46@icloud.comà
  ்

Tuesday, December 12, 2017


National flag Dosai

Nationa   Flag    DosI(மூவர்ண    கொடி   தோசை)
தேவை:---4கப:---புழுங்கல்   அரிசி,1கப்:-----உளுந்து,     வெந்தயம்2டீஸ்பூன்   இவற்றை4மணி   நேரம்,    ஊற வைத்து,தோசை   மாவு    அரைத்துக்   கொள்ளவும்.2காரட்டை   துருவி   வைத்துக்கொள்ளவும்.   துருவிய   தேங்காய்:-----2கப்,   3 கப்   குடைமிளகாயை.  நறுக்கி
வதக்கி(உப்பும்   சேர்த்து)வைத்துக்கொள்ளவும்.  தோசை    வார்க்க   எண்ணெய்.
செய்முறை:-----அடுப்பில்,       தோசைக்   கல்லைப்   போட்டு,    காய்ந்தவுடன்,   அடுப்பை
சிம்மில்,    வைத்து  மெல்லிய    தோசைகளாக   வார்க்கவும்.  நன்கு    வெந்தவுடன்,
திருப்பிப்    போட்டு,   ஒரு   அகலமான   லேயர்  மேலே   காரட்,   துருவலைப்   போட்டு,
அடுத்த    லேயர்,    தேங்காய்   துருவலைப்பரப்பி ,     மூன்றாவது    லேயர்,வதக்கிய
 வைத்த,குடை   மிளகாயை   பரப்பி ,   தோசையை   மூடிக்     கொடுத்தால்,சிறியோர்
முதல்,   பெரியோர்கள்    வரை   விரும்பி   உண்பர்.  காய்கறிகள்    இருப்பதால்,   வேண்டும்
என்றால்    சைட்    டிஷ்ஷாக    சட்னிசெய்து   கொள்ளலாம்.அ

Monday, December 11, 2017


Karunai Kilangu Masiyal

Karunai   Kilangu    masiyal(கருணை. கிழங்கு   மசியல்.)
  தேவை:---வேகவைத்த   கருணை  கிழங்கு:--3;புளி:--சிறிதளவு,(நாக்குஅரிக்காமல்
இருக்க) பச்சை  மிளகாய்:-----3,இஞ்சி:---சிறிதளவு, தாளிக்க:--எண்ணெய்,:---5டீஸ்பூன்,
கடுகு,    எலுமிச்சம்பழம் :----1/2  மூடி,     உப்பு:----தேவையான  அளவு,   கறிவேப்பிலை,
கொத்தமல்லி:----சிறிதளவு,பெருங்காயப்பொடி:--1டீஸ்பூன்
செய்முறை:----வாணலியில்,எண்ணெய்  ஊற்றி   கடுகு   தாளித்து,   பச்சை  மிளகாய்,  இஞ்சி
இவற்றுடன்  மசித்தகிழங்கையும்,    சேர்த்து   நன்கு   வதக்கவும்.   பின்பு   புளியைகரைத்து,
ஊற்றி ,    உப்பு    மஞ்சள்  பொடி   சேர்க்கவும்.  நன்கு    கொதித்த   உடன்கறிவேப்பிலை,
கொத்தமல்லி ,   பெருங்காயம்   சேர்த்து,இறக்கி    எலுமிச்சம்பழம்   பிழியவும்.
நல்ல  ருசியான   மசியல் ,   மூல  நோய்   வராமல்   தடுக்கும்.     நன்கு பசி எடுக்கும்.
சாதம்,    தோசை,    இட்லி   இவற்றிற்கு,   சைட்    டிஷ்ஷாகவும்,    பயன்படும்
கருத்துக்களை    மின்   அஞ்சல்முகவரிக்கு   அனுப்பவும்.  
               girija46@icloud.com




Friday, December 8, 2017

Tomato Paneer ,pulaav

 Tomato   Paneer   Pulaav(தக்காளி     பன்னீர்    புலாவ்)
தேவை:----வதக்கிய   வெங்காயம் :---1கப்,      இஞ்சி    பூண்டு   விழுது:-----1டீஸ்பூன்,   நறுக்கி  வதக்கிய    தக்காளி:----2கப்,     கட். செய்து   வதக்கிய  பன்னீர்:------2கப்,உப்பு:-----தேவையான  அளவு,     தேங்காய்  துருவியது:----சிறிதளவு.புலாவ்ரைஸ்:----3கப் ,     எண்ணெய்/நெய்4டீஸபூன்
சீரகம்:------1டீஸ்பூன்
செய்முறை:-----வாணலியில்,எண்ணெய்/நெய்ஊற்றி,சீரகத்தைப்போட்டு,வெங்காயம்,இஞ்சி   பூண்டு
விழுது,தக்காளி,   இவற்றை   எல்லாம்   போட்டு    நன்குவதக்கி,புலாவ்   ஸரஸை    போட்டு   பொரியும்வரை     வதக்கி,2கப்   தண்ணீர்   ஊற்றி உப்பும்போட்டு,மூடி     வைத்துவிட்டு,நடு     நடுவே
கிளறிக்  கொடுக்கவும்.சாதம்   நன்கு   வெந்தபிறகு,    பன்னீரையும்போட்டு  கிளறி    மேலே
நறுக்கிய    கொத்தமல்லியால்   அலங்கரிக்கவும்
மணம்,சுவை   மிகுந்த    இந்த  ரைஸ்   சிறிது,   உண்டாலே    வயிறு    நிரம்பி விடும்.சாப்பாட்டில்
 மாற்றம்,தேவைப்பட்டால்,இதை    எளிதாக  செய்து   உண்ணலாம்.    குழந்தைகள்    விரும்பி   உண்பர்.சைட்    டிஷ்   ஆக,பூந்தி   ரெய்தா   செய்யலாம்.
     கருத்துக்களை    மின்  அஞ்சல்  முகவரிக்கு   அனுப்பவும்.
           girija46@icloud.com

Thursday, December 7, 2017

Mango Kootaan

Mango    Kootaan(மாம்பழ   கூட்டான்)
தேவை:----நல்ல   பழுத்த.  மாம்பழம்(நறுக்கி    வைத்துக்கொள்ளவும்.)வெள்ளை   பூசணிக்காயை
2கப்    நறுக்கி    வைத்துக்     கொள்ளவும்.   மாம்பழம்:---1கப்,   அரைப்பதற்கு:---துருவிய
 தேங்காய்:---3/4கப்,பச்சை  மிளகாய்:---2,அரிசி  மாவு:----1டீஸ்பூன்.      தாளிக்க:--தேங்காய்
எண்ணெய்:----2டீஸ்பூன்,   கடுகு,  சீரகம்,   தலா  1டீஸ்பூன்.  புளி:----சிறு  எலுமிச்சங்காய்   அளவு.
செய்முறை:---வாணலியில்,தாளித்து,  மாம்பழத்தையும்,    பூசணிக்காயையும்,     புளித்தண்ணீரில்
வேகவிடவும்.மஞ்சள்    பொடியையும்,பெருங்காயத்தையும்,    சேர்க்கவும்.    நன்கு    வெந்து,   கொதித்தப்பின்,     அரைத்த   விழுதையும்,     உப்பையும்    சேர்க்கவும்.     நன்கு ,     சேர்ந்து
வரும்பொழுது,    கறிவேப்பிலை   போட்டு   இறக்கவும்.
  மிகவும்    சுவையுள்ள,இந்த    குழம்பு,     ஒருவித,     இனிப்பு   சுவையுடன்,    சாதம்,   இட்லி,
   தோசை,     சப்பாத்தி   இவற்றிற்கு,    ஏற்ற    சைட்.  டிஷ்ஷும்,   ஆகும்.
கருத்துக்களை,    மின்   அஞ்சல்,    முகவரிக்கு,     அனுப்பவும்.
        girija46@icloud.com