Thursday, December 14, 2017

Vegetable role Dosai

Vegetable   Role dosai(விஜிடபிள்    ரோல்   தோசை.)
தேவை:----4கப்    இட்லி   அரிசி,1கப் :----உளுத்தம்பருப்பு பருப்பு,   2டீஸ்பூன்
 வெந்தயம்,ஊறவைத்து,    அரைத்து,உப்பும். கலந்து    வைத்துக்கொள்ளவும்.
கோஸ்,   காரட்,     பீன்ஸ்,    பட்டாணி,இவற்றை   வேகவைத்து,  வெங்காயத்தை
 வதக்கி,அதனுடன் வேகவைத்த   காய்களையும்,உப்பு,     காரம்சேர்த்து
வைத்துக்கொள்ளவும்.கொத்தமல்லிதழை(நறுக்கியது)     துருவிய    பன்னீர்
அலங்கரிக்க    வைத்துக்கொள்ளவும்.
செய்முறை:---அடுப்பில்    தோசைக்கல்லை   ஏற்றி,    கல்   சூடானதும்,    சிம்மில்
வைத்து,     மெலிதாக    தோசை    வார்க்கவும்.     நன்கு,     வெந்த தும்     திருப்பிக
போட்டு,வெந்தபிறகு,     காய்கறி  கலவையை,   அதன்மீது    வைத்து,     மேலே
பன்னீரும்     தூவி,      கொத்தமல்லியையும்    தூவி   தோசையை     சுருட்டி(ரோல்)
சுடச்சுட   பரிமாறவும்.     குழந்தைகள்,    மிகவும்.  விரும்பி    உண்பர்.      நல்ல
சத்து   மிகுந்துள்ளது .    காய்கறிகள்,      விரும்பாதவர்கள்    கூட  இதை    விரும்பி
உண்பர்.சத்துக்கள்     மிகுந்து     இருப்பதால்,  ஒரு தோசை     தின்றால்   கூட
வயிறு   நிரம்பி   விடும்.
கருத்துக்களை,  மின்    அஞ்சல்    முகவரிக்கு    அனுப்பவும்
        girija46@icloud.comà
  ்

1 comment: