Friday, March 27, 2020

Panneer. 65

      பன்னீர்---65
தேவை:--பன்னீர்  சதுரம் , சதுரமாக, கனமாக இல்லாமல், லேசாக வெட்டி வைத்துக்  கொள்ளவும்.
சாட் மசாலா:--2டீஸ்பூன், உப்பு தேவையான அளவு, மிளகாய்ப்பொடி---1டீஸ்பூன்
 செய்முறை:-- வெட்டி வைத்துள்ள பன்னீரின்மேல்,  உப்பு சாட்மசாலா , மிளகாய்ப் பொடி
 லேசாக தூவி விடவும். இதை கெட்டித்தயிரில்,(2டீஸ் பூன்) ஊற வைக்கவும் 5நிமிடம் கழித்து
 வாணலியை அடுப்பில் ஏற்றி,  வெண்ணெய் 2 டீஸ்பூன்  போட்டு அது உருகியவுடன்,
அடுப்பை  மிகவும், லேசான தீயில் வைத்து  மசாலா மேலே இருக்கு மாறு,
போட்டு. உடனே எடுத்து விட வேண்டும்,
  இந்த  பன்னீரை,  5,6    துண்டுகள்  தான். உண்ண முடியும் ஆனால் மிகவும்
 ருசியானது.சிறியோர்முதல்,  பெரியோர்  வரை, விரும்பி. உண்பர்
உங் களுடைய  கருத்துக்களை girija46@icloud.com. என்ற இ மெயிலில்
 அனுப்பலாம். வரவேற்கப்படுகின்றன.


Sambar more kulambu

சாம்பார் மோர்குழம்பு
தேவை:--மோர் கடைந்தது:-2கப்
மோரில்,உப்பு, குழம்புப் பொடி--1டீஸ்பூன், மஞ்சள்பொடி:--1/2 டீஸ்பூன்
உரித்து இரண்டாக நறுக்கிய சின்ன வெங்காயம்,    உங்களுக்கு தேவையான காய்கள், வேக வைத்து மோரில்  போடவும். தேங்காய்எண்ணெயில், கடுகு , சீரகம், பச்சை மிளகாய், வரமிளகாய்ப்
வதக்கி, அத்துடன் காய்களையும் வதக்கிப் மோரில் போடவும். பெருங்காயம்சேர்க்கவும
 கடலை மாவு 1டீஸபூன் போட்டு நன்கு கலக்கவும்
செய்முறை:---கலந்த மோர்ஸ் அடுப்பில். வைத்து, வேகவைத்த பருப்பை 3கரண்டி கலந்து
நன்கு பொங்கி வரும்வரை வைத்து இறக்கி, கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்க்கவும்.
  நல்ல ருசியும் மணமும் மிகுந்த குழம்பு  சாத்த்திற்கும், தோசை, இட்லி   சேவை
 எல்லா வற்றிற்கும், ஏற்ற. சைட். டிஷ்

Monday, March 9, 2020

உருளைக்கிழங்கு பட்டாணி சேவை

உருளைக்கிழங்கு பட்டாணிசேவை
தேவை:-:-வேகவைத்து உரித்த நறுக்கிய உருளைக் கிழங்கு:--1கப்
பட்டாணி:-  1கப் பெரிய வெங்காயம்  நறுக்கியது:--1கப்
பிழிந்த சேவை3:- கப்
பச்சை மிளகாய்:--2நறுக்கியது
 கறி வேப்பிலை, உப்பு, பெருங்காயப்போடி:-- தேவையான்அளவு
 செய்முறை:----வாணலியில் , கடுகு உளுத்தம்பருப்பு தாளித்து, வெங்காயத்தையும் பட்டாணியையும்
வத்க்கி,பின்பு உருளையையும்சேர்த்து, கிளறி,சிறிது மஞ்சளபொடி சேர்த்து,, வத்க்கி சேவையை யும்
சேர்த்து கிளறி, கறிவேப்பிலை, பெருங்காய்ப்பொடியையும்போட்டு,  நன்கு வத்க்கி இறக்கவும்
           மணமும் ருசியும் மிகுந்த சேவை உடலுக்கு மிகவும் நல்லது. ப்பெரியோர்முதல் சிறியோர் வரை விரும்பி உண்பர். இரவு நேர டிபனுக்கு உக்ந்தது

உங்கள் கருத்துக்களை girija46@icloud.com என்ற இ -மெயிலில் பதிவு செய்யலாம்

Friday, February 28, 2020

சேனைக்கிழங்கு கூட்டு

சேனைக்கிழங்கு கூட்டு
 தேவை:--
பொடியாக நறுக்கிய  சேனைக்கிழங்கு2கப்
வறுத்து அரைக்க:-- கடுகு1டீஸ்பூன்,  உளுத்தம்பருப்பு:--2டீஸ்பூன்,
கொத்தமல்லி விதை:---3டீஸ்பூன்;மிளகாய்வத்தல்-2;துருவிய தேங்காய்
1/2கப்,:இவற்றை  வறுத்து அரைத்துக்கொள்ளவும்.புளி:-எலுமிச்சங்காய்
அளவு.கறிவேப்பிலை,கொத்தமல்லிதழை, பெருங்காயம், உப்ப
 தேவையான அளவு சேர்க்கவும்.
செய்முறை:---வாணலியில் எண்ணெய்ஊற்றி , கடுகு தாளித்து,
 சேனையை நன்கு  வதக்கவும். பின்பு புளியைகரைத்து ஊற்றி, 2 கொதி
 வந்தவுடன் அரைத்த மசாலாவையும், போட்டு உப்பும் போட்டு
நன்கு கொதிக்க விட்டு, கறிவேப்பிலை,கொத்தமல்லி,
 பெருங்காயம், போட்டு இறக்கி விடவும். மிகவும்
ருசியானது. சாதம், இட்லி, தோசை, சப்பாத்தி,  மிகவும்
இணையானது.
செய்துபார்த்து,  கருத்துக்களை girija46@icloud.com
என்ற மெயிலுக்கு  அனுப்பலாமா.