Wednesday, January 24, 2018

Tomato Thokku

Tomato. Thokku(தொக்கு)
தேவை:--10தக்காளியை,பொடியாக,நறுக்கிக்   கொள்ளவும்.10பூண்டையும்,
பொடியாக   நறுக்கிக்.  கொள்ளவும்.உப்ப, காரப்பொடி, மஞ்சள்பொடி  போட்டு
மைக்ரோ வேவ்அவனில்   8நிமிடம் வைக்கவும்
செய்முறை:------அடுப்பில்,வாணலியை   ஏற்றி,நல்லெண்ணெய்,    ஊற்றி,  கடுகு
தாளித்து,தக்காளியை    நன்கு   வதக்கவும். தக்காளி  புளிப்பு. ஆனதால்,
சிறிது  சர்க்கரை  சேர்த்துக்  கொள்ளவும்.  இரும்பு   கரண்டியில்,எண்ணெய்
இல்லாமல்,வெந்தயம்   கடுகு  வறுத்துக்  கொள்ளவும்.நன்கு   வதக்கிய   பிறகு
இறக்கும்பொழுது,பெருங்காயப்பொடி,   கடுகு,வெந்தயப்பொடி,   சேர்த்து,
நன்கு கிளறி   இறக்கவும்.
மிக,மிக,ருசியான  இந்த. தொக்கு,சாதம்,இட்லி,  தோசை,    சப்பாத்தி ,  பூரி
போன்றவற்றிற்கு,    உகந்தது.ப்ரிட்ஜ்ஜில்,வைத்து,    உண்ணலாம்.ஒரு  மாதம்
வரை கெட்டுப்போகாது.
கருத்துக்களை,     மின் அஞ்சல்  முகவரிக்கு   அனுப்பவும்
girija46@icloud.com


Tuesday, January 23, 2018

தாளக குழம்பு.


 Thalaka   Kulambo
தேவை:---பூசணிக்காய், பரங்கிக்காய்,   அவரைக்காய்,நறுக்கியது
தலா.:---1கப், மொச்சைக் கொட்டை:---1கப்,  தட்டைப்பயிறு
:----1கப்,  இவற்றை. வேகவைத்துக்கொள்ளவும்.வறுக்க:---கடுகு
உளுத்தம்பருப்பு,கடலைப்பருப்பு,     கொத்தமல்லி  விதை,மிளகாய்
வத்தல்:---3 ,தேங்காய். துருவியது:----1/2கப்,  எல்லாவற்றையும்
மிக்ஸியில  அரைத்துக்   கொள்ளவும்.   மீதி1/2மூடித். தேங்காயை
தேங்காய் எண்ணெயில்,சிவக்க   வறுத்து  வைத்துக்கொள்ளவும்
புளி:----எலுமிச்சங்காய்,   அளவு, உப்பு:--தேவையான  அளவு,
வறுப்பதுடன்,எள்ளு   சேர்த்து வறுத்துக். கொள்ளவும்.
செய்முறை:--வாணலியை,அடுப்பில்,ஏற்றி,எண்ணெயைஊற்றி
காய்கறிகளை. ,வதக்கவும்.நன்கு வழங்கிய  பிறகு,   புளியை
கரைத்து  ஊற்றி,   பச்சை. வாசனை. போகுமவரை,கொதிக்க
விடவும்.பின்பு   அரைத்த விழுதை கலந்து ,உப்பும்  போட்டு
கொதிக்க விட்டு,பெருங்காயப்பொடி,  கறிவேப்பிலை 
போட்டு,வறுத்ததேங்காயையும்   போட்டு,     நன்கு
கிளறி    இறக்கவும்
நிறைய   சத்துக்கள் அடங்கிய,இக்குழம்பு,   மணமும்
ருசியும். கொண்டது. சாதம்,தோசை,இட்லிஇவற்றிற்கு
உகந்தது   ஆகும்.
கருத்துக்களை,      மின். அஞ்சல்முகவரிக்கு  அனுப்பவும்
girija46@icloud.com

Monday, January 22, 2018

திருவாதிரை களி

தேவை:----பச்சரிசி2கப்   எடுத்துக்கொண்டு,அதை   நன்கு    சிவப்பாகவும்
வறுத்துக்  கொள்ளவும்.      பின்பு   அதை   மிக்ஸியில்,    கோல் மாவு ,
பத்த்திற்கு    பொடித்துக்கொள்ளவும்.   அந்த   மாவை    அளந்துக்   கொள்
ளவும்.11/2கப்    இருந்தால்,  3கப்   வெல்லத்தை பொடித்துக்   கொள்ளவும்.
3கப்,     தண்ணீரை  கொதிக்க    வைக்கவும்.ஏலக்காய்2  டீஸ்பூன்,பொடி
செய்துக் கொள்ளவும்.    முந்திரி. பருப்பை. நெய்யில் ,     வறுத்துக்கொள்
ளவும்.   குங்கும்ப்பூ   இருந்தால்,    சேர்க்கலாம்.
செய்முறை:-----கொதிக்க வைத்த,    தண்ணீரை,   அடுப்பில், வைத்து,அதில்
வெல்லத்தை,     போட்டு, நன்குகரைந்து ,இரட்டை   பாகு  வந்தவுடன்,
1/2 கப்  துருவிய   தேங்காய்,போட்டு, அரிசி  மாவையும்,      போட்டு,    நன்கு
கிளறவும். இறக்கும்   பொழுது, ஏலக்காய்,    முந்திரி பருப்பு   போட்டு,குங்கும
பூ வும்    போட்டு நெய்   ஊற்றி,  நன்கு   கிளறி  இறக்கவும்.
 நல்ல    ருசியும்    மணமும்  மிகுந்தது.
   கருத்துக்களை   மின் அஞ்சல் முகவரிக்கு   அனுப்பவும்.
  girija46@icloud.com