Friday, February 28, 2020

சேனைக்கிழங்கு கூட்டு

சேனைக்கிழங்கு கூட்டு
 தேவை:--
பொடியாக நறுக்கிய  சேனைக்கிழங்கு2கப்
வறுத்து அரைக்க:-- கடுகு1டீஸ்பூன்,  உளுத்தம்பருப்பு:--2டீஸ்பூன்,
கொத்தமல்லி விதை:---3டீஸ்பூன்;மிளகாய்வத்தல்-2;துருவிய தேங்காய்
1/2கப்,:இவற்றை  வறுத்து அரைத்துக்கொள்ளவும்.புளி:-எலுமிச்சங்காய்
அளவு.கறிவேப்பிலை,கொத்தமல்லிதழை, பெருங்காயம், உப்ப
 தேவையான அளவு சேர்க்கவும்.
செய்முறை:---வாணலியில் எண்ணெய்ஊற்றி , கடுகு தாளித்து,
 சேனையை நன்கு  வதக்கவும். பின்பு புளியைகரைத்து ஊற்றி, 2 கொதி
 வந்தவுடன் அரைத்த மசாலாவையும், போட்டு உப்பும் போட்டு
நன்கு கொதிக்க விட்டு, கறிவேப்பிலை,கொத்தமல்லி,
 பெருங்காயம், போட்டு இறக்கி விடவும். மிகவும்
ருசியானது. சாதம், இட்லி, தோசை, சப்பாத்தி,  மிகவும்
இணையானது.
செய்துபார்த்து,  கருத்துக்களை girija46@icloud.com
என்ற மெயிலுக்கு  அனுப்பலாமா.