Saturday, March 24, 2018

Onion buttermilk kolambu

 வெங்காய  மோர்க்குழம்பு.
தேவை:---தாளிக்க:---வெந்தயம்,  கடுகு,   சீரகம், ஒரு  பச்சை மிளகாய் ,ஒரு மிளகாய்வத்தல்,
தேங்காய். எண்ணெய்:---2டீஸ்பூன், பொடியாக நறுக்கிய  வெங்காயம்,சிறிதளவு  கறிவேப்பிலை
கரைத்து  ஊற்ற, 2டீஸ்பூன்   கடலைமாவு.மிளகாய்  பொடி:--1டீஸ்பூன்,  தேவையான  அளவு  உப்பு
மோர்:--2கப்,பெருங்காயப்  பொடி.மஞ்சள்  பொடி1டீஸ்பூன
               
செய் முறை:----அடுப்பில்   வாணலியை   ஏற்றி  மேற் கூறியவற்றை போட்டு,     தாளித்து,  வெங்காயத்தை யும்,   போட்டு,  நன்கு  வதக்கவும்.     வதக்கியவற்றை,   சிறிது   ஆறிய  பிறகு

மோரில்   போட்டு  நன்கு  கலக்கி    அடுப்பில்   வைத்து, பொங்கும்   சமயத்தில்,    கறிவேப்பிலை,
பெருங்காயப்பொடியும்   சேர்த்து  கலக்கி   இறக்கி  விடவும்
மிகவும்.    ருசியானது .சாதம்,  அடை  இவற்றிற்கு,  உகந்தது.
கருத்துக்களை  இ---மெயில்   முகவரிக்கு  அனுப்பவும்
girija46@gmail.com

Friday, March 16, 2018

White sauce Corn

White sauce  corn
சாஸ்   கார்ன்
தேவை:----வெண்ணெய்1/2கப்;  மைதா1/2கப்   சாஸ் தயாரிக்க.பால்1/2கப்
வேகவைத்த   கார்ன்:----2கப்; தேங்காய் , முந்திரி   அரைத்தது1/2கப்.
நறுக்கிய கொத்தமல்லி  தழை :---சிறிதளவு,  மேலே  அலங்கரிக்க , மிளகுப்பொடி1டீஸ்பூன்
செய்முறை  :---வாணலியை   அடுப்பில்.  ஏற்றி   வெண்ணெயை உருக்கி,    அதில்  மைதாவைப்
போட்டு சாஸ்தயாரிக்கவும்.கொஞ்சம், கொஞ்சமாக பாலை  சேர்த்து,  தோசை. மாவு   பத த்தில்,
ரெடி  செய்யவும். அதில்,    அரைத்த  விழுதைப். போட்டு,உப்பும்   போட்டு, ஒரு  கொதி விடவும்.
பின்பு     வேகவைத்த  கார்ன்,   கலந்து,  மிளகுப்  பொடியைச்.   சேர்க்கவும்  நன்கு   கிளறி
மேலே  கொத்தமல்லியால்   அலங்கரிக்கவும்.
நல்ல  சத்தான  உணவு , மாலை நேர  சிற்றுண்டியாகவும் , உண்ணலாம்.
கருத்துக்களை,    இ--மெயில் முகவரிக்கு அனுப்பவும்
girija46@icloud.com







Thursday, March 15, 2018

cucumber juice

cucumber  juice
வெள்ளரிக்காய்ஜூஸ்
 தேவை:---6வெள்ளரிக்காயை   துருவி   பிழிந்து,   ஜூஸ்   பிழிந்து,   எடுத்து
வைத்துக் கொள்ளவும்.
1/2மூடி   எலுமிச்சம்பழச் சாறு,
சர்க்கரை:--தேவையான  அளவு.
செய்முறை:----வெள்ளரி   சாறை யும்,  எலுமிச்சம்பழ   சாறை  யும், கலந்து
தேவையான  அளவு  தண்ணீர், சர்க்கரை  சேர்த்து,   பருகினால்,உடல்
குளுமை  அடைவதுடன்,மலசிக்கல் வராமல்  காப்பாற்றும்
கருத்துக்களை இ-மெயில்முகவரிக்கு  அனுப்பவும்.
girija46@icloud.com




Tuesday, March 13, 2018

Kara adai

கார அடை.
தேவை:---அரிசி  மாவு:--2கப்
நறுக்கிய  பச்சைமிளகாய்2,துருவிய  இஞ்சி   சிறிதளவு,
தேங்காய். துருவியது:---1கப்,2ஸ்பூன்   மோர்,பெருங்காயப்பொடி1ஸ்பூன்
உப்பு:--தேவையான  அளவு,உலர்ந்த  மாவாய்   இருப்பின் 1கப்
மாவிற்கு  2கப்  தண்ணீர் தேவை.ஈரமாய் இருந்தால்  சரிக்கு  சரிபோதும்
கறிவேப்பிலை,  கொத்தமல்லி  தழை  சிறிதளவு.
செய்முறை:---அடுப்பில்  வாணலியை ஏற்றி,எண்ணெயை ஊற்றி,கடுகு
தாளிக்கவும்.அதனுடன். பச்சைமிளகாய்,இஞ்சி.யும். சேர்த்து  வதக்கவும்
அளந்து  வைத்துள்ள,தண்ணீரை,ஊற்றி , உப்பு,மோர்,கறிவேப்பிலை
கொத்தமல்லி  தழையையும்  சேர்த்து
பெருங்காயப்பொடி. போட்டு   கொதிக்க  விடவும். பின்பு தேங்காயை
போட்டு,   மாவையும்அதனுடன்   சேர்த்து   கெட்டியாக  கிளறவும்
ஆறியபிறகு ,வடையாக  தட்டி,    5 நிமிடம் ஆவியில். வேகவிடவும்
பின்பு ,  நெய்யைத்   தொட்டு.   ஒவ்வொன்றாய்  எடுத்து வைக்கவும்உடலுக்கிம்
நல்லது.  நல்ல  ருசியானதும். கூட.
கருத்துக்களை, இ--மெயில். முகவரிக்கு  அனுப்பவும்
girija46@icloud.com




Monday, March 12, 2018

Karadaiyan nonbu Adai.

காரடையான். நோன்பு. அடை
தேவை:----அரிசியை  சிவப்பாக,    வறுத்து, மிக்ஸியில், நன்கு , மாவு,    ஆக்கிக்கோள்ளவும்.
 ஒரு கப் மாவிற்கு,  2கப்,  தண்ணீர் ஊற்ற வேண்டும்
 வெல்லம்(பொடித்து)ஒரு  கப்   மாவிற்கு   3/4 கப்வெல்லம்   எடுத்துக்  கொள்ளவும்
ஏலக்காய் பொடித்தது   ஒரு   டீஸ்பூன்   ; துருவிய. தேங்காய்   1/2 கப்
செய்முறை:--நிமிடம-வாணலியை,    அடுப்பில்   ஏற்றி நீர்ஊற்றி,   கொதிக்கும். பொழுது  மாவைவேகவை த்து,பின்பு  வெல்லத்தை  சேர்த்து ,    நன்கு  கெட்டியாக. கிளறி,   ஏலக்காய்  தேங்காய்,பொடியைச்.  சேர்க்கவும்.  ஆறியபிறகு,    நெய்யை த்  தொட்டு   வடையாக  தட்டி,  ஆவியில்,   இட்லியைப்  போல்,  5 நிமிடம்  வேக வைத்து,     எடுத்து  விடவும்.
 கடவுளின்   முன்    ஒரு    இலையிலோ   அல்லது,  ஒரு தட்டிலோ,    2  வடை யும், கொஞ்சம்
கெட்டி   வெண்ணெயும்,     வைத்து   கடவுளுக்கு   படைத்து,
" உருகாத  வெண்ணெயும் ,   ஒர்.  அடையும். நான் கொடுப்பேன்,   ஒருகாலும்
என்   கணவன்,   என்னை விட்டு   பிரி யாமல், இருக்கும்படி" என்று  பிரார்த்தனை  செய்யவேண்டும்.
 இது   மாங்கல்ய   பூஜை  என்பது   மிகவும். முக்கியம்
உங்கள்    கருத்துக்களை    இ மெயில் முகவரிக்கு   அனுப்பவும்
girija46@icloud.com