Tuesday, January 23, 2018

தாளக குழம்பு.


 Thalaka   Kulambo
தேவை:---பூசணிக்காய், பரங்கிக்காய்,   அவரைக்காய்,நறுக்கியது
தலா.:---1கப், மொச்சைக் கொட்டை:---1கப்,  தட்டைப்பயிறு
:----1கப்,  இவற்றை. வேகவைத்துக்கொள்ளவும்.வறுக்க:---கடுகு
உளுத்தம்பருப்பு,கடலைப்பருப்பு,     கொத்தமல்லி  விதை,மிளகாய்
வத்தல்:---3 ,தேங்காய். துருவியது:----1/2கப்,  எல்லாவற்றையும்
மிக்ஸியில  அரைத்துக்   கொள்ளவும்.   மீதி1/2மூடித். தேங்காயை
தேங்காய் எண்ணெயில்,சிவக்க   வறுத்து  வைத்துக்கொள்ளவும்
புளி:----எலுமிச்சங்காய்,   அளவு, உப்பு:--தேவையான  அளவு,
வறுப்பதுடன்,எள்ளு   சேர்த்து வறுத்துக். கொள்ளவும்.
செய்முறை:--வாணலியை,அடுப்பில்,ஏற்றி,எண்ணெயைஊற்றி
காய்கறிகளை. ,வதக்கவும்.நன்கு வழங்கிய  பிறகு,   புளியை
கரைத்து  ஊற்றி,   பச்சை. வாசனை. போகுமவரை,கொதிக்க
விடவும்.பின்பு   அரைத்த விழுதை கலந்து ,உப்பும்  போட்டு
கொதிக்க விட்டு,பெருங்காயப்பொடி,  கறிவேப்பிலை 
போட்டு,வறுத்ததேங்காயையும்   போட்டு,     நன்கு
கிளறி    இறக்கவும்
நிறைய   சத்துக்கள் அடங்கிய,இக்குழம்பு,   மணமும்
ருசியும். கொண்டது. சாதம்,தோசை,இட்லிஇவற்றிற்கு
உகந்தது   ஆகும்.
கருத்துக்களை,      மின். அஞ்சல்முகவரிக்கு  அனுப்பவும்
girija46@icloud.com

No comments:

Post a Comment