Wednesday, December 20, 2017

Dhal Usili

 Dhal  usili( பருப்பு  உசிலி)
தேவை:---துவரம்  பருப்பு:-----1கப்,     கடலை   பருப்பு:----1கப்,தேங்காய்:----1/4
கப்,   பச்சை    மிளகாய்:---2,     இஞ்சி:----சிறிதளவ,     உப்பு:---தேவையானஅளவு
கறிவேப்பிலை,    கொத்தமல்லி  தழை:----சிறிதளவு.
செய்முறை:----துவரம் பருப்பு,   கடலை  பருப்பையும், தனித்  தனியாக   ஒரு
மணி   நேரம் , ஊறவைத்து   நீர்   இல்லாமல்   வடித்து    வைத்துக்    கொள்ளவும்.
பின்   மிக்ஸியில்    துவரம்பருப்பு    பச்சை மிளகாய்,   இஞ்சியுடன் சேர்த்து,ஒன்றும்
இரண்டுமாக,   அரைத்துக்   கொள்ளவும். அதைப்போன்று,     கடலை   பருப்பு,
கறிவேப்பிலை,   கொத்தமல்லியுடன்,அரைத்துக்கொள்ளவும்.  இரண்டையும்
 கலந்து,   அவனில்,   ஒருநிமிடம்     வேகவைக்கவும்.   பின்,  அடுப்பில்,  வாணலியை
ஏற்றி  எண்ணெய்   ஊற்றி,     கடுகு  தாளித்து,      வேகவைத்த  பருப்புக்களையும்,
போட்டு,    உதிர்,   உதிராக  வதக்கவும்.    அதனுடன்,   வேகவைத்த    பீன்ஸ்,    அல்லது
கோஸ்,   கொத்தவரங்காய்,    அல்லது   வெந்தயக்கீரை,   முருங்கை. கீரைப்.
போட்டும்,    செய்யலாம் .   இறக்கும்   பொழுது  பெருங்காயப்பொடி    சேர்த்து ,  நன்கு
கிளறி    இறக்கவும்.  
  இதை    சாத்த்துடன்     இணைத்தும்    உண்ணலாம்.    மோர்க்குழம்புக்கு    ஏற்ற,
சைட் டிஷ்.   தோசையுடன்   நடுவில்,     வைத்தும்   உண்ணலாம்.   புரதம்    மிகுந்துள்ள
 உணவு.    பருப்பு    சேர்த்துக்   கொள்ளாதவர்களுக்கு,   இது   ஒரு    மாறுதலாய்     இருக்கும்
நல்ல    சுவை,     மணம்கொண்டது
கருத்துக்களை     மின்   அஞ்சல்    முகவரிக்கு    அனுப்பவும்
girija46@icloud.com













No comments:

Post a Comment