Wednesday, July 31, 2019

கோதுமை கடலை மாவு கட்லெட

தேவை:--கோதுமை மாவு, கடலை மாவு  தலா:---1கப்
வேகவைத்து. தோல் உரித்த. உருளைக்கிழங்கு--1;கொத்தமல்லி தழை, புதினா தழை,அலம்பி, ஆய்ந்தது---தலா--1கப்பு.பச்சை மிளகாய்------2,
உப்பு-----தேவையான அளவு. சீரகப்பொடி, ---1/2டீஸ்பூன்
செய்முறை:----புதினா, கொத்தமல்லி, பச்சை மிளகாயை நன்றாக அரைத்து, அதனுடன் உருளைக்கிழங்கையும், உப்பு, சீரகப்பொடியையும், சேர்த்துநன்கு, பிசைந்து , மசாலாவை, ரெடிசெய்துவைத்துக்கொள்ளவும்.பின்பு கோதுமை மாவையும், கடலை மாவையும்,கலந்து,2டீஸ்பூன்
 எண்ணெய்யும், ஊற்றி ஈனோவை  கரைத்து , ஊற்றி, உப்பு  போட்டு,இட்லி மாவு பத த்திற்கு கரைத்துக் கொள்ளவும்.பின்பு , 4கிண்ணத்தில்,எண்ணெய் தடவி,முதலில் கொஞ்சம் மாவு  ஊற்றி,
பின்பு அதன்மேல் கிளறி. வைத்த மசாலாவை கொஞ்சம்  போட்டு, அதன்மேல், திரும்பியும்
மாவை  ஊற்றி, குக்கரில்வேகவைத்து ( லெட்  போடாமல்)10 நிமிடம், வேக விடவும்.ஆறியபிறகு
 தட்டில் வைத்து   நான்காக. வெட்டவும். வாணலியில். எண்ணெய் ஊற்றி,  வெட்டிய  கட்லெட்டுகளை, இரு பக்கமும் நன்கு. கோல்டன் கலராக. வரும் வரை வத்க்கி உண்ணவும்.
மிகவும், ருசியானதும் மணமானதும்  ஆகும்.
   செய்து பார்த்து உங்கள்  கருத்துக்களை,girija46@icloud.comஎன்ற இ மெயிலுக்கு அனுப்பவும்.


No comments:

Post a Comment